சினிமா செய்திகள்

பாலியல் வழக்கில் சிக்கிய நடிகை சுவேதா பாசு திருமணம் + "||" + Caught in sex case Actress Sueta Basu is married

பாலியல் வழக்கில் சிக்கிய நடிகை சுவேதா பாசு திருமணம்

பாலியல் வழக்கில் சிக்கிய நடிகை சுவேதா பாசு திருமணம்
நடிகை சுவேதா பாசுவுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
தமிழில் ரா ரா, சந்தமாமா படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுவேதா பாசு. தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2002-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மக்தி என்ற இந்தி படத்துக்காக தேசிய விருதையும் பெற்றார். துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனாலும் பெரிய பட வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. இதனால் வருமானமும் குறைந்தது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் சிக்கி கைதானார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் படங்களில் நடித்தார்.


சுவேதா பாசுவும், இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலும் நண்பர்களாக பழகினார்கள். பின்னர் இருவரும் காதல் வயப்பட்டனர். இருவரும் ஜோடியாக எடுத்த படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தனர். பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். ஆனாலும் திருமண தேதியை வெளியிடாமல் இருந்தனர். இந்த நிலையில் வருகிற 13-ந் தேதி திருமணம் புனேயில் நடக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

திருமணத்தையொட்டி இருவரும் பாலி தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து கொடுத்தனர். அந்த படங்களை இருவரும் வெளியிட்டுள்ளனர்.