சினிமா செய்திகள்

14-ந் தேதி தொடங்குகிறது - ‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன் + "||" + Starts on 14th - Kamal Haasan in 'Indian-2' shooting

14-ந் தேதி தொடங்குகிறது - ‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன்

14-ந் தேதி தொடங்குகிறது - ‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு வரும் 14-ந் தேதி தொடங்குகிறது.
கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. கமலின் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்ததால் இரண்டாம் பாகத்திலும் அந்த வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.


இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். வயதான தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்தார். படப்பிடிப்புக்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

முதல் பாகத்தில் அரசு அதிகாரிகளின் லஞ்சம் முக்கிய கருவாக இருந்தது. இரண்டாம் பாகம் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கின்றனர். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள 2.0 படம் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன. இந்தியன்-2 படத்தையும் அதே பிரமாண்டத்தில் உருவாக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா பெயர் அடிபடுகிறது. வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘அரசாங்கம் துரத்தும் படங்களை எடுத்து இருக்கிறோம்’’ பட விழாவில் கமல்ஹாசன் பேச்சு
ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள புதிய படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
2. ‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
தேர்தல் முடிவுகள் ஊக்கத்தை தந்திருப்பதாகவும், அரசியல் தன்னுடைய தொழில் அல்ல என்றும் கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.
3. தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை -கமல்ஹாசன்
தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் எதுவும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
4. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
5. வேலாயுதம்பாளையம் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள்-முட்டை வீச்சு
வேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டன.