சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்தில் ‘கமல் ஜோடி காஜல் அகர்வால்? + "||" + In the Film, Indian 2 Kamal pair with Kajal Agarwal?

இந்தியன்-2 படத்தில் ‘கமல் ஜோடி காஜல் அகர்வால்?

இந்தியன்-2 படத்தில் ‘கமல் ஜோடி காஜல் அகர்வால்?
இந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறாரா என தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும் இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது.


விபத்தில் அவர் இறந்துவிட்டதாக போலீஸ் கருதுவதுபோன்றும், ஆனால் வெளிநாட்டில் அவர் இருப்பது போன்றும் முதல் பாகம் படத்தை முடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்திலும் முதியவர் வேடத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.

இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கின்றனர். 2.0 படத்தைபோல் இந்தியன்-2 படத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படமாக தயார் செய்கின்றனர்.

இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கமல்-ரஜினிக்கு மதுரையில் பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா திட்டம்
ரஜினி, கமல் ஆகிய இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக மதுரையில் பிரமாண்ட விழா நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார்.
2. கன்னியாகுமரியில் பரபரப்பு விஷம் குடித்து விட்டு போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடி விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா?
மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
4. ‘வர்மா’ படத்தில் துருவ் ஜோடி, இந்தி நடிகை பனிதா சந்து
வர்மா படத்தில் துருவ் ஜோடியாக, இந்தி நடிகை பனிதா சந்து நடிக்க உள்ளார்.
5. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா?
புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.