4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து ரஜினியின் 2.0 சாதனை

x
தினத்தந்தி 3 Dec 2018 9:16 AM GMT (Updated: 3 Dec 2018 9:16 AM GMT)

ரஜினியின் 2.0 வெளியான முதல் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

சென்னை

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானில் 2.0 திரைப்படம் அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலில் 25 திரையரங்கில் 2.0 திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை அடுத்து  மேலும் 75 திரையரங்குகளில்  படம் வெளியிடப்பட்டுள்ளது.

2.0 படம் வெளியான முதல் நாளில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி, ஷங்கர், அக்ஷய் குமார் என பிரம்மாண்ட கூட்டணி  ரசிகர்களை எழுந்த பெரிய எதிர்பார்ப்பை ஓரளவுக்கு படம் பூர்த்தி செய்துள்ளது.

இந்நிலையில் முதல் 4 நாட்களில்  மட்டும் உலகளவில் 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி உலக அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் படமான Fantastic Beasts விட 2.0 வசூல் இந்த 4 நாட்களில் அதிகம்.

Next Story