சினிமா செய்திகள்

பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , கமல் எனது நண்பர்- ரஜினிகாந்த் பேட்டி + "||" + Prime Minister Modi wants to do good for the country, Kamal is my friend Interview with Rajinikanth

பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , கமல் எனது நண்பர்- ரஜினிகாந்த் பேட்டி

பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , கமல் எனது நண்பர்-  ரஜினிகாந்த் பேட்டி
பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என்றும், கமல்ஹாசன் எனது நண்பர் அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சென்னை

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்துக்கு நல்ல தலைமை தேவை எனவும் தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது. 

தமிழர்கள் கடின உழைப்பாளிகள், அறிவாளிகள் தாங்கள் யார் என்பதை அவர்கள் மறந்து போய்  உள்ளனர்.

 அரசியலையும் சினிமாவையும் ஒருபோதும் தான் இணைத்து பார்த்ததில்லை.  பொழுதுபோக்கு விஷயமான சினிமாவில் அரசியல் கொண்டு வரக்கூடாது. சில படங்களில் அரசியல் வசனங்கள் இருப்பது கூட, வேண்டுமென்றே வைத்தது அல்ல. 

சினிமா நடிகர்கள், அரசியலில் வெற்றி பெற முடியும் என நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர்  சினிமாவில் இருந்து வருபவர்களுக்கு எம்ஜிஆர் ஒரு முன்னுதாரணம் ஆகும்.

ஜெயலலிதாவின் உறுதி, தன்னம்பிக்கையை பாராட்டியுள்ள ரஜினிகாந்த், ஆண்கள் நிறைந்த அரசியல் உலகில் தனித்து நின்றவர் ஜெயலலிதா என தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் எனது நண்பர்  அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை . 

பிரதமர் மோடி  நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்   அதற்காகவே, கடினமாக முயற்சித்து பல்வேறு செயல்களை செய்துவருகிறார். மக்களுக்கு சிறந்ததை கொடுக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார்.

இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை, மாற்று அரசியலை உருவாக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு . அதில் கவனமாக விளையாட வேண்டும் என  ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராதாரவி சர்ச்சை பேச்சு: தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி - நயன்தாரா
தன்னை குறித்து ராதாரவி தவறாக பேசிய விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என நடிகை நயன்தாரா தெரிவித்து உள்ளார்.
2. தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி முடிவு செய்ய வேண்டி இருக்கும்: ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை
தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி முடிவு செய்ய வேண்டி இருக்கும் என ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
3. உடலில் நெருப்பு பற்ற வைத்த அக்‌ஷய்குமாரை பார்த்து மனைவி அதிர்ச்சி
உடலில் நெருப்பு பற்ற வைத்த நடிகர் அக்‌ஷய்குமாரை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.
4. பெண்களை இழிவுபடுத்தும் நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் - சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்
பெண்களை இழிவுபடுத்தும் நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
5. ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன்- கமல்ஹாசன்
சென்னை விமான நிலையத்தில் பேசிய கமல்ஹாசன், ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.