சினிமா செய்திகள்

இந்தி நடிகை நிர்வாண திருமணம்அமெரிக்காவில் நடக்கிறது + "||" + Hindi actress naked marriage

இந்தி நடிகை நிர்வாண திருமணம்அமெரிக்காவில் நடக்கிறது

இந்தி நடிகை நிர்வாண திருமணம்அமெரிக்காவில் நடக்கிறது
இந்தி நடிகை ராக்கி சாவந்தை திருமணம் செய்யும் தீபக், எங்கள் திருமணம் நிர்வாணமாக நடைபெறும் என்று கூறியுள்ளார்.
தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ராக்கி சாவந்த், இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதத்தாவுடன் மோதினார். சண்டிகரில் நடந்த குத்துசண்டை போட்டியில் பெண் வீராங்கனையிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

40 வயதாகும் ராக்கி சாவந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இந்தி டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தீபக் கலால் (வயது 45) என்பவரை மணக்கிறார். வருகிற 30–ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவர்கள் திருமணம் நடக்கிறது. திருமண அழைப்பிதழை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

திருமணம் குறித்து ராக்கி சாவந்த் கூறும்போது, ‘‘நானும் தீபக்கும் டி.வி நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டு திருமணத்துக்கு தயாராகி உள்ளோம். திருமணத்துக்கு ஷாருக்கான், சல்மான்கான், தீபிகா படுகோனே, கரீனா கபூர் உள்ளிட்ட நடிகர்–நடிகைகளை அழைத்து இருக்கிறோம்’’ என்றார். வருங்கால கணவருக்கு தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழையும் ராக்கி சாவந்த் அனுப்பி அதிர வைத்துள்ளார்.

தீபக் கூறும்போது, ‘‘டி.வி.யில் ராக்கி சாவந்தின் குத்தாட்டத்தை பார்த்து ரசித்துள்ளேன். அவரையே திருமணம் செய்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எங்கள் திருமணம் நிர்வாணமாக நடைபெறும். ஆடைக்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுப்போம்.’’ என்றார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.