சினிமா செய்திகள்

லுங்கியில் அமலாபால் கவர்ச்சிவைரலாகும் புகைப்படம் + "||" + Amala paul in Lungi

லுங்கியில் அமலாபால் கவர்ச்சிவைரலாகும் புகைப்படம்

லுங்கியில் அமலாபால் கவர்ச்சிவைரலாகும் புகைப்படம்
நடிகை அமலா பால் லுங்கியை மடித்து கட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த படத்தை வெளியிட்டுள்ளார்.
அமலாபால் நடித்து கடந்த வருடம் ‘வேலையில்லா பட்டதாரி–2’, ‘திருட்டுப்பயலே–2 ஆகிய படங்களும், இந்த வருடம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘ராட்சசன்’ படங்களும் திரைக்கு வந்தன. இதில் ராட்சசன் படம் வசூல் குவித்தது. இப்போது ஆடை, அதோ அந்த பறவை போல ஆகிய 2 தமிழ் படங்களிலும், அது ஜீவிதம் என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார். 

‘ஆடை’ படத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக இருப்பது போன்ற அவரது தோற்றம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகைகளை மிஞ்சும் வகையில் ஆடை குறைப்பு செய்து இருந்ததாக விமர்சனங்கள் கிளம்பின. மீ டூவில் பாலியல் புகார் சொல்லியும் பட உலகை அதிர வைத்தார். 

மேலும் டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து பிரிந்த அவர் நடிகர் விஷ்ணுவிஷாலை 2–வது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமீபத்தில் தகவல்கள் பரவின. இருவரும் ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். அப்போது காதல் மலர்ந்ததாகவும் கூறப்பட்டது. இதனை விஷ்ணு விஷால் மறுத்தார். 

இந்த நிலையில் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய படமொன்றை வெளியிட்டு உள்ளார். லுங்கியை மடித்து கட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.