சினிமா செய்திகள்

‘‘எனது கணவர், கடவுள் கொடுத்த பரிசு’’ –தீபிகா படுகோனே + "||" + My husband is a gift from God -Debika Padukone

‘‘எனது கணவர், கடவுள் கொடுத்த பரிசு’’ –தீபிகா படுகோனே

‘‘எனது  கணவர், கடவுள் கொடுத்த பரிசு’’ –தீபிகா படுகோனே
இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோனேவுக்கும், பிரபல இந்தி நடிகர் ரன்வீர்சிங்குக்கும் திருமணம் முடிந்துள்ளது.
திருமணத்துக்கு பிறகு முதல் முறையாக தீபிகா படுகோனே அளித்த பேட்டி வருமாறு:–

‘‘ரன்வீர் சிங்கை மணந்தது ரொம்ப சந்தோ‌ஷம். அவர் சிறந்த நடிகர். துறுதுறுவென இருப்பார். எல்லோரையும் சந்தோ‌ஷமாக வைத்துக்கொள்ளும் மனநிலை உள்ளவர். அவரை கடவுள் கொடுத்த பரிசாக நான் நினைக்கிறேன். வாழ்க்கையில் நல்லது கெட்டது நடந்தாலும் அவரது லட்சியம் ஒரே மாதிரி இருக்கும். எதற்கும் கவலைப்படமாட்டார். அப்படிப்பட்ட ஒருவர் எனது வாழ்க்கை துணைவரானது அதிர்ஷ்டம். வெற்றியை பெரிதாக நினைக்காமல் வேலையில் கவனம் செலுத்துகிறேன். என்னை பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதால் கர்வம் ஏற்படுவது இல்லை. இதனால் என் வேலையில் இன்னும் கவனம் செலுத்துவேன். 

வெற்றியை தற்காலிகமானது என்றே நினைக்கிறேன். நாளை அது இருக்குமா என்பது தெரியாது. எல்லோரும் சம நிலையில் இருக்க வேண்டும். எனது மனம் சொல்வதை கேட்கிறேன். அனுபவங்கள் என்னை நல்ல நடிகையாக உருவாக்கி இருக்கிறது. என்னை மனதில் வைத்து கதையை உருவாக்குகின்றனர். அதுவும் பெருமையாக இருக்கிறது. இதுவரை நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே எனக்கு அமைந்தன. நமது வாழ்க்கையில் என்ன எழுதி வைத்து இருக்கிறதோ அது நடக்கும்.’’

இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா? -தீபிகா படுகோனே
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
2. சமூக வலைதளத்தில் நடிகை தீபிகா படுகோனேவை 3 கோடி ரசிகர்கள் பின் தொடருகின்றனர்
சமூக வலைதளத்தில் பின்தொடரும் 3 கோடி ரசிகர்கள். தீபிகா நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
3. குண்டு வெடிப்பு, தீவிபத்தை குறிப்பிட்டு திருமணத்தை இன்சூரன்ஸ் செய்த தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமணம் இத்தாலியில் நடந்து முடிந்துள்ளது. அங்குள்ள லோக் கோமா பகுதியில் உள்ள ஓட்டலில் 2 நாட்கள் இந்த திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
4. இத்தாலியில் பலத்த பாதுகாப்புடன் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்
இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
5. தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்; அடுத்த மாதம் நடக்கிறது
நடிகை தீபிகா படுகோனே - நடிகர் ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதம் நடக்க உள்ளது.