சினிமா செய்திகள்

போலி ஐபோன் கொடுத்து நடிகர் நகுலிடம் மோசடி + "||" + Fake iPhone Fraud

போலி ஐபோன் கொடுத்து நடிகர் நகுலிடம் மோசடி

போலி ஐபோன் கொடுத்து நடிகர் நகுலிடம் மோசடி
தன்னிடம் போலி ஐபோன் கொடுத்து மோசடி செய்துவிட்டதாக நகுல் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
‌ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். காதலில் விழுந்தேன் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உள்பட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த செய் படம் திரைக்கு வந்தது. இவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பி ஆவார். 

தன்னிடம் போலி ஐபோன் கொடுத்து மோசடி செய்துவிட்டதாக நகுல் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:– 

எனது மனைவி சுருதிக்கு திருமண நாள் பரிசாக ஐபோன் வழங்க முடிவு செய்து ரூ.1.25 லட்சம் செலுத்தி ஆன்லைனில் கடந்த 29–ந் தேதி ஆர்டர் செய்தேன். மறுநாள் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் போனை கொடுத்துவிட்டு சென்று விட்டனர். வீடு திரும்பி பார்சலை பிரித்தபோது போலி ஐபோன் இருந்ததை பார்த்து அதிர்ந்தேன். 

இதுகுறித்து ஐபோனை விற்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்தேன். முதலில் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றனர். அதன்பிறகு எங்கள் ஆட்கள் வந்து போனை வாங்கிவிட்டு பணத்தை தந்துவிடுவார்கள் என்றனர். ஆனாலும் யாரும் வரவில்லை.

 இவ்வாறு நகுல் கூறியுள்ளார்.