சினிமா செய்திகள்

அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் 3-வது ஆண்டாக சல்மான் கான் முதலிடம், நயன்தாராவுக்கு 69-வது இடம் + "||" + Salman Khan tops Forbes India highest earning celeb list for third time

அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் 3-வது ஆண்டாக சல்மான் கான் முதலிடம், நயன்தாராவுக்கு 69-வது இடம்

அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் 3-வது ஆண்டாக  சல்மான் கான் முதலிடம், நயன்தாராவுக்கு 69-வது இடம்
இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் 3-வது ஆண்டாக சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.
மும்பை,

அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். அவர் நடித்த டைகர் ஜிந்தா ஹே, ரேஸ் 3 படங்கள் ஹிட்டானதை அடுத்தும் விளம்பர படங்கள் மூலமும் அவர் இத்தனை கோடியை சம்பாதித்துள்ளார். தொடர்ந்து 3-வது ஆண்டாக சல்மான் கான் இந்தப் பட்டியலில் முதலிடம் வகித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 228.09 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். 2.O படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் , மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 185 கோடி சம்பாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரபல நடிகை தீபிகா படுகோன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ.112.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். 

கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்த முதல் பெண் பிரபலம் தீபிகா படுகோன் தான் ஆவார். கடந்த ஆண்டு 7-ஆம் இடம் வகித்து வந்த பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2018- ஆம் ஆண்டு வெறும் 18 கோடியை மட்டுமே பிரியங்கா சோப்ரா வருவாயாக ஈட்டியுள்ளார். இந்தப் பட்டியலில்  தோனி (101.77 கோடி) மற்றும் சச்சின் (80 கோடி) முறையே ஐந்து மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். 

ரூ.66.75 கோடி வருவாய் ஈட்டி ஏ.ஆர் .ரகுமான் 11-வது இடத்தில் உள்ளார். ரஜினிகாந்த் ரூ.50 கோடி வருவாயுடன் 14-வது இடத்தில் உள்ளார்.   ரூ.15.7 கோடி வருவாயுடன் நயன்தாரா 69-வது இடத்தில் உள்ளார்.   



தொடர்புடைய செய்திகள்

1. தனிமை என்பது தண்டனையல்ல.. தனியாக வாழும் பிரபலங்களின் ஜாலியான அனுபவங்கள்
‘தனிமையிலும் இனிமை காண முடியும்’ என்ற மன உறுதியோடு, திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.