அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள்


அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள்
x
தினத்தந்தி 5 Dec 2018 12:16 PM GMT (Updated: 5 Dec 2018 12:16 PM GMT)

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய முழு தகவலை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 228.09 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். 2.0 படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 185 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரபல நடிகை தீபிகா படுகோன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ.112.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.  கடந்த ஆண்டு 7-ஆம் இடம் வகித்து வந்த பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

5 மகேந்திர சிங் டோனி ரூ.101.77 கோடி
6 அமீர் கான்  ரூ.97.5 கோடி
7 அமிதாப்பச்சன் ரூ.96.17 கோடி
8 ரன்வீர் சிங்  ரூ. 84.67 கோடி
9 சச்சின் தெண்டுல்கர் ரூ. 80 கோடி 
10  அஜய் தேவ் கான் ரூ. 74.5 கோடி
12 அலியா பட்  ரூ.58.83 கோடி
13 ஷாருக்கான்  ரூ. 56 கோடி 
15 வருண் தவான் ரூ.49.58 கோடி 
16 அனுஷ்கா சர்மா ரூ.45.83 கோடி
17 ரன்பீர் கபூர்  ரூ.44.5 கோடி 
18 அர்ஜித் சிங் ரூ.43.32 கோடி 
19 சஞ்சய் தத் ரூ. 37.85 கோடி
20 பிவி சிந்து ரூ.36.5 கோடி
21 காத்ரினா கைஃப் ரூ.33.67 கோடி 
22 ஷங்கர்-எஷான்-லோய்  ரூ. 32.46 கோடி
23 ரோகித் சர்மா ரூ.31.49 கோடி 
24 பவன் கல்யாண் ரூ.31.33 கோடி
25 கரீனா கபூர் கான் ரூ.31 கோடி
27 ஹர்திக் பாண்ட்யா ரூ.28.46 கோடி 
28 ஜூனியர் என்டிஆர் ரூ.28 கோடி
30 கரண் ஜோகர் ரூ.25.9 கோடி 
31 அமித் திரிவேதி ரூ.25.28 கோடி
32 சஞ்சீவ் கபூர்  ரூ.24.5  கோடி 
33 மகேஷ் பாபு ரூ.24.33 கோடி 
36 நாகார்ஜூனா ரூ.22.25 கோடி
37 சித்தார்த் மல்கோத்ரா ரூ. 21.67 கோடி
40 ஜாகுலின் பெர்னாண்டஷ் ரூ.19.95 கோடி
41 ஹிர்திக் ரோஸன் ரூ.19.56 கோடி 
42 ஜான் ஆப்ரகாம்  ரூ.19.3 கோடி
43 விஷார் சேகர் ரூ. 19.04 கோடி 
44 ரவிசந்திரன் அஸ்வின் ரூ.18.9 கோடி
46 சோனு சிஹாம் ரூ.18.46 கோடி
47 ராஜ்குமார் ஹிரானி ரூ.18.33 கோடி 
47 சஞ்சய் லீலா பன்சாலி ரூ.18.33 கோடி
49 மம்முட்டி  ரூ.18 கோடி
51 மிகா சிங்  ரூ.17.4 கோடி 
53 தனுஷ் ரூ.17.25 கோடி 
56 ஐஸ்வர்யாராய் பச்சன் ரூ.16.83 கோடி
58 சாய்னா நெய்வால் ரூ.16.54 கோடி
64  அல்லு அர்ஜூன்  ரூ.15.67 கோடி
67 டாப்சி பன்னு ரூ.15.48 கோடி
70 ஷர்தா கபூர் ரூ.15.15 கோடி
72 ராம் சரண்  ரூ.14 கோடி 
72 விஜய் தேவரகொண்டா ரூ.14 கோடி
74 பார்தி சிங் ரூ. 13.95 கோடி
76 சோனம் கபூர் அகுஜா ரூ.13.23 கோடி
79 ஹரி ரூ. 12 கோடி 
83 பிரினிதி சோப்ரா ரூ.11.35 கோடி
85 மாதுரி தீட்ஷித்  ரூ.10.98 கோடி
94 திவ்யங்கா திரிபாதி தஹியா ரூ. 7.8 கோடி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார். 

ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Next Story