சினிமா செய்திகள்

திருமண வரவேற்பு: பிரியங்கா சோப்ராவை வாழ்த்திய பிரதமர் + "||" + Wedding reception: Prime Minister congratulates Priyanka Chopra

திருமண வரவேற்பு: பிரியங்கா சோப்ராவை வாழ்த்திய பிரதமர்

திருமண வரவேற்பு: பிரியங்கா சோப்ராவை வாழ்த்திய பிரதமர்
டெல்லியில் நடந்த பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமண வரவேற்பில், பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகர் நிக்ஜோனாசும் காதலித்தனர். இப்போது இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஜோத்பூரில் உள்ள உமைத்பவன் அரண்மனையில் இரு தினங்களுக்கு முன்பு இந்து–கிறிஸ்தவ முறைப்படி இவர்கள் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. 

பிரதமர் நரேந்திரமோடி இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஜோத்பூரில் நடந்த திருமணத்துக்கு பிரதமர் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்தி நடிகர்–நடிகைகள், தொழில் அதிபர்களும் நேரில் வாழ்த்தினார்கள். வருகிற 27–ந் தேதி தேனிலவு செல்கிறார்கள். 

இந்த திருமணம் சர்ச்சைகளையும் கிளப்பியது. பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர் என்பதால் அமெரிக்காவில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வந்து மணக்கிறார் என்று விமர்சனங்கள் கிளம்பின. திருமணத்தில் பட்டாசுகள் வெடித்து மாசு ஏற்படுத்தியாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் பதிவிட்டனர்.  திருமணத்தில் யானை, குதிரைகளை நிற்க வைத்து துன்புறுத்தியதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டாவும் கண்டித்தது. அவற்றை பிரியங்கா சோப்ரா பொருட்படுத்தவில்லை. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களிலும், ஹாலிவுட் டி.வி. தொடர்களிலும் நடிக்க உள்ளார். 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கோடீஸ்வரர்களும், பிரபலங்களும் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் விலை உயர்ந்த பங்களாவை வாங்கி இருக்கிறார். அங்கு கணவருடன் பிரியங்கா சோப்ரா குடியேறுகிறார்.