தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு விஷால் காரணம் அல்ல” -விஷ்ணு விஷால் சொல்கிறார்


தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு விஷால் காரணம் அல்ல” -விஷ்ணு விஷால் சொல்கிறார்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:03 PM GMT (Updated: 8 Dec 2018 10:03 PM GMT)

தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு விஷால் காரணம் அல்ல என்று விஷ்ணு விஷால் சொல்கிறார்.

தமிழ் படங்களின் வெளியீடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழுவை அமைத்தது. படங்களின் வெளியீடு தேதிகளை அந்த குழு நிர்ணயம் செய்கிறது. அதன்படி, வருகிற 21-ந் தேதி, ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு,’ விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி,’ விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்பட சில படங்கள் வெளிவர உள்ளன.

தொடர்ந்து தனுஷ் நடித்த ‘மாரி-2’ சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ உள்பட சில படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

இதனால் குறைந்த முதலீட்டு படங்களை தயாரித்த பட அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். குழப்பம் நிலவியது. அதைத்தொடர்ந்து 21-ந் தேதி, யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

இதுபற்றி ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“பிரச்சினைகளுக்கும், குழப்பத்துக்கும் காரணம், தலைவர் விஷால் அல்ல. உள்குத்து அரசியல்தான் காரணம். விதிமுறைகளை கடைபிடிப்பவர்களுக்கு இப்படித்தான் நீதி வழங்கப்படுமா? விதிமுறைகள், அதை கடைபிடிப்பவர்களுக்கு மட்டும்தானா? எனக்கு இது முதல் முறையல்ல. இரண்டாவது முறையாக இது நடக்கிறது.”

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.

Next Story