சினிமா செய்திகள்

“அழவைக்கும் படங்களில் நடிக்க பிடிக்காது” - நடிகை தமன்னா + "||" + "I do not like to act in crying films" - actress Tamanna

“அழவைக்கும் படங்களில் நடிக்க பிடிக்காது” - நடிகை தமன்னா

“அழவைக்கும் படங்களில் நடிக்க பிடிக்காது” - நடிகை தமன்னா
அழவைக்கும் படங்களில் நடிக்க பிடிக்காது என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்த தமன்னா இப்போது சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

இன்னொரு நடிகை மாதிரி வரவேண்டும் என்று மற்றவர்களுடன் ஒப்பிட கூடாது. நான் என்னை மாதிரிதான் இருக்க வேண்டும். தமன்னா போல் வரவேண்டும் என்று வேறு நடிகைகள் நினைப்பதும் தவறு. அவரவருக்கு திறமை உண்டு. அதை வெளிப்படுத்த வேண்டும். எனக்கு பிடித்த நடிகைகள் நிறைய பேர் உள்ளனர்.


அவர்கள் படங்களையும் பார்ப்பேன். அதில் கற்றுக்க வேண்டிய விஷயங்கள் இருந்தால் எடுத்துக்கொள்வேன். அவர்கள் மாதிரி நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. எனது பலமும் பலவீனமும் தெரியும். தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தினால் போதும். பெயர், புகழ், வெற்றிகள் தானாக வந்து சேரும். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனது படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நான் வயதுக்கு மீறிய படங்களில்தான் நடித்து இருக்கிறேன். அழ வைக்கிற கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்காது. ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் படங்களில் நடிக்கவே ஆர்வம் இருக்கிறது. தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று தகவல் பரப்புகின்றனர். அது உண்மை இல்லை. நிறைய படங்களில் நடிக்கிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.