சினிமா செய்திகள்

உத்தரகாண்டில் எதிர்ப்பு: ‘கேதார்நாத்’ படத்துக்கு தடை + "||" + Opposition in Uttarakhand: 'Kedarnath' banned from film

உத்தரகாண்டில் எதிர்ப்பு: ‘கேதார்நாத்’ படத்துக்கு தடை

உத்தரகாண்டில் எதிர்ப்பு: ‘கேதார்நாத்’ படத்துக்கு தடை
உத்தரகாண்டில் கேதார்நாத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத், சாரா அலிகான், நிதிஷ் பரத்வாஜ் ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள இந்தி படம் கேதார்நாத். அபிஷேக் இயக்கி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவில் பகுதியில் 2013-ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.


இந்து-முஸ்லிம் காதல், முத்த காட்சிகள், காதல்தான் புனித பயணம் என்ற வாசகம் போன்றவை படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் இந்து மதத்தையும் இந்துக்கள் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் கேதார்நாத்தையும் அவமதிக்கும் காட்சிகள் உள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.

படத்துக்கு தடைவிதிக்கும்படி இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரகாஷ் ராஜ்புத் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இது விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்றும் வழக்கு தொடர்ந்தவர் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் கேதார்நாத் படம் திரைக்கு வந்தது. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. தியேட்டர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவியது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள டேராடூன், நைனிடால், அல்மோரா, ஹரித்துவார் உள்பட ஏழு மாவட்டங்களில் கேதார்நாத் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. மண்ணச்சநல்லூர் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மண்ணச்சநல்லூர் அருகே நங்கமங்கலம் சத்திரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை
காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3. கீழ்வேளூர் அருகே, தி.மு.க. கொடி மேடையை அகற்ற கட்சியினர் எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
கீழ்வேளூர் அருகே தி.மு.க. கொடி மேடையை அகற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ரபேல் வழக்கு; மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ரபேல் வழக்கில், மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
5. வெள்ளாற்றின் நடுவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.