சினிமா செய்திகள்

வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது + "||" + 20 new films are coming out on the 14th and 21th of coming

வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது

வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாக உள்ளது.
பெரிய படங்களால் சிறிய படங்கள் வசூல் பாதிப்பதை தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களின் வெளியீட்டு தேதிகளை முறைப்படுத்தி வந்தது. வாரம் தோறும் தணிக்கை செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை படங்களை மட்டும் வெளியிட அனுமதி கொடுத்தது. சங்கத்தில் அனுமதி பெறாத படங்களை திரையிட தடையும் விதிக்கப்பட்டது.


இந்த நிலையில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி 52 புதிய படங்களை திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தை பட அதிபர்கள் வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து 2 பண்டிகைகளிலும் எவ்வளவு படங்களை வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்ளலாம் என்று சங்கம் அனுமதி வழங்கியது.

இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 14-ந்தேதி விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, ஜானி, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபு, திரு, ஓடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

வருகிற 21-ந்தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன. தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி மேலும் 22 படங்கள் வெளியாகின்றன.