சினிமா செய்திகள்

சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்? + "||" + End in cinema acting: Another hero who replied to Kamal in 'Thevarmagan 2'?

சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?

சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
சினிமாவை விட்டு விலகுவதால், தேவர் மகன்-2 படத்தில் கமல்ஹாசனுக்கு பதில் வேறு கதாநாயகன் நடிக்கிறாரா என தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி சுற்றுப்பயணம், தொண்டர்கள் சந்திப்பு, மக்கள் பிரச்சினைகளுக்கு நேரடியாக தீர்வு காணுதல் என்று அரசியல் பணிகளில் பரபரப்பாக இருக்கிறார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளார்.


தொடர்ந்து இந்தியன்-2, தேவர் மகன்-2 ஆகிய 2 படங்களில் நடிக்கவும் தயாராகி வந்தார். தேவர் மகன் பெயர் வைக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதன் பெயர் மாற்றப்படும் என்றும் விளக்கம் அளித்தார். இந்தியன்-2 படப்பிடிப்பு வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த படத்தின் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வரவழைத்து கமல்ஹாசனுக்கு மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்தனர்.

இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் ஈடுபடப் போவதாக கமல்ஹாசன் திடீரென்று அறிவித்து உள்ளார். ஆனாலும் தனது ராஜ்கமல் பட நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிப்பில் ஈடுபடும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் தேவர் மகன்-2 படம் தயாராவது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு பதில் வேறு கதாநாயகனை நடிக்க வைத்து ராஜ்கமல் நிறுவனமே தயாரிப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.