சினிமா செய்திகள்

விஸ்வாசம் சிங்கிள் டிராக் வெளியீடு: இணையத்தில் வைரலாகும் ‘அடிச்சுத்தூக்கு’... + "||" + Vishvamam Single Track Release: On the Internet viral in "Adichithooku"

விஸ்வாசம் சிங்கிள் டிராக் வெளியீடு: இணையத்தில் வைரலாகும் ‘அடிச்சுத்தூக்கு’...

விஸ்வாசம் சிங்கிள் டிராக் வெளியீடு: இணையத்தில் வைரலாகும் ‘அடிச்சுத்தூக்கு’...
‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு...’ என்ற சிங்கள் டிராக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,

அஜித்- சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான். இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் சிங்கில் டிராக் ‘அடிச்சுத் தூக்கு’ என்ற பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியானது. விவேகா எழுதியுள்ள இப்பாடலை இமான், ஆதித்யா, நாராயண் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், சமூக வலைத்தளத்தில் இப்பாடலை வைரலாக்கி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. விஸ்வாசம்
மகளின் லட்சியம் நிறைவேற உதவும் அப்பா. படம் ‘விஸ்வாசம்’ கதாநாயகன் அஜித்குமார், கதாநாயகி நயன்தாரா, டைரக்‌ஷன் சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் விமர்சனம்.
2. அந்தரங்க படங்களை வெளியிட்டதால் “கணவரை விவாகரத்து செய்தேன்” - நடிகை பிரியங்கா
அந்தரங்க படங்களை வெளியிட்டதால், தனது கணவரை விவாகரத்து செய்ததாக நடிகை பிரியங்கா தெரிவித்தார்.
3. ரஷியாவில், அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம்
அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ வர்த்தக வட்டாரங்களில் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
4. விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு
‘விஸ்வாசம்’ படத்தில் இருந்து வெளியான அடிச்சு தூக்கு பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
5. குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.