சினிமா செய்திகள்

கஞ்சா சாமியாராக ஹன்சிகா - சர்ச்சை தோற்றத்துக்கு எதிர்ப்பு + "||" + Hansika as a canabis samiyar - To Controversy Appearance Opposition

கஞ்சா சாமியாராக ஹன்சிகா - சர்ச்சை தோற்றத்துக்கு எதிர்ப்பு

கஞ்சா சாமியாராக ஹன்சிகா - சர்ச்சை தோற்றத்துக்கு எதிர்ப்பு
கஞ்சா சாமியாராக நடிக்கும் ஹன்சிகாவின் சர்ச்சைக்குரிய தோற்றத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஹன்சிகா துப்பாக்கி முனை, 100, மஹா ஆகிய படங்களில் நடிக்கிறார். துப்பாக்கி முனை படம் முடிந்து திரைக்கு வருகிறது. மஹா படத்தில் அவரது முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். ருத்ராட்ச மாலையும், காவி உடையும் அணிந்து கஞ்சா அடித்தபடி இருக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது.


இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஹன்சிகா தோற்றத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சிலர் இப்படி ஒரு நடிகை போஸ் கொடுக்கலாமா? என்று எதிர்ப்புகளும் கிளப்பி உள்ளனர். ஏற்கனவே சர்கார் படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் போஸ்டருக்கு கண்டனங்கள் கிளம்பின. சுகாதார துறையும் நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் அந்த புகைப்படத்தை டுவிட்டரில் இருந்து பட நிறுவனம் நீக்கியது. இப்போது ஹன்சிகா புகைப்பிடிக்கும் படமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஹன்சிகா தோற்றத்தை நடிகர் ஆர்யா டுவிட்டரில் பாராட்டி உள்ளார். அவருக்கு நன்றி மச்சான் என்று ஹன்சிகா பதில் அளித்துள்ளார்.

சர்ச்சை தோற்றம் குறித்து படத்தின் இயக்குனர் ஜமீல் கூறும்போது, “ஹன்சிகாவின் புகைப்பிடிக்கும் தோற்றத்தை விமர்சிப்பது முறையல்ல. அதை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். படத்தில் ஒருவர் மது அருந்துகிறார் என்றால் குடிகாரன் என்ற கதாபாத்திரத்துக்காக அதை செய்கிறார் என்று அர்த்தம். இதுவரை பார்க்காத ஹன்சிகாவை இந்த படத்தில் பார்க்கலாம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக தயாராகிறது. ஸ்ரீகாந்தும் இதில் நடிக்கிறார்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு: சர்ச்சையில் மன்மோகன் சிங் படம்
காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு காரணமாக, மன்மோகன் சிங் படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
2. கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்
கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 40 கிலோ கஞ்சா பார்சல்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
3. களியக்காவிளை அருகே 2½ கிலோ கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது மாணவர்களுக்கு சப்ளை செய்தது அம்பலம்
களியக்காவிளை அருகே 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. தேனியில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 110 கிலோ கஞ்சா பறிமுதல்- பெண் உள்பட 2 பேர் சிக்கினர்
தேனியில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 110 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. ஐ.ஏ.எஸ். அதிகாரியின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை
ஐதராபாத்-கர்நாடக மண்டல மேம்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருப்பவர் சுபோத் யாதவ். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டார்.