கொரிய பட ‘ரீமேக்’கில் 74 வயது கிழவியாக சமந்தா


கொரிய பட ‘ரீமேக்’கில் 74 வயது கிழவியாக சமந்தா
x
தினத்தந்தி 11 Dec 2018 11:45 PM GMT (Updated: 11 Dec 2018 6:50 PM GMT)

சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். அவர் நடிப்பில் இந்த வருடம் நடிகையர் திலகம், யூடர்ன், இரும்புத்திரை, சீமராஜா ஆகிய படங்கள் வந்தன.

விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் தற்போது நடிக்கிறார். இந்த நிலையில் ‘மிஸ் கிரானி’ என்ற கொரிய படத்தின் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். 

இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. ‘மிஸ் கிரானி’ கொரிய படம் 2014–ல் வெளியானது. சீனா, ஜப்பான் உள்பட பல்வேறு மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டும் வரவேற்பை பெற்றன. இப்போது இந்தியாவிலும் ரீமேக் ஆகிறது. இதில் 74 வயதான கிழவி மற்றும் இளம்பெண் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் சமந்தா நடிக்கிறார். 

நாகசவுரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். நந்தினி ரெட்டி டைரக்டு செய்கிறார். கணவனை இழந்த 74 வயது கிழவி தனது குடும்பத்துக்கு சுமையாக இருப்பதாக கருதுகிறார். அவருக்கு திடீரென மந்திர சக்தி ஏற்பட்டு அதன் மூலம் 20 வயது பெண் தோற்றத்தை பெறுகிறார். அதன்பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பதே மிஸ் கிரானி படத்தின் கதை. நகைச்சுவையும், சுவாரஸ்யமும் நிறைந்த படமாக திரைக்கதை அமைத்து உள்ளனர். தென்கொரியாவில் இந்த படம் முதலில் வெளியாகி பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது.

Next Story