சினிமா செய்திகள்

சமூக வலைத்தளத்தில் அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் சாதனை + "||" + Ajith's 'Adichi thooku' song record on the social website

சமூக வலைத்தளத்தில் அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் சாதனை

சமூக வலைத்தளத்தில் அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் சாதனை
அஜித்குமாரின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. சிவா இயக்கியுள்ளார்.
வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு 4–வது முறை இந்த படத்தில் அஜித்தும், சிவாவும் இணைந்துள்ளனர். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வருவதால் இரண்டு படங்களும் மோதுகின்றன. 

பேட்ட படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் விஸ்வாசம் குழுவினரும் ஒரு பாடலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அறிமுக பாடலாக கருதப்படும் இந்த பாடலில் அஜித் வயதான தோற்றத்தில் கம்பீரமாக தோன்றி நடனம் ஆடுகிறார். அங்காளி பங்காளி என்று பாடல் தொடங்குகிறது. 

அடிச்சி தூக்கு, செம சீனா சிதற வைக்கணும், பாத்தா பதற வைக்கணும், அப்பதாண்டா நீ என் ஆளு, மங்காத்தா கட்ட போல இந்த வட்டாரம் நம்ம கையில், புடி புடி, நான் நினைச்சது எல்லாம் ஒவ்வொன்னா நல்லா நடக்குது போன்ற வரிகள் உள்ளன. இந்த பாடலை ரசிகர்கள் ‘அடிச்சி தூக்கு’ என்ற ஹேஷ்டேக்குடன் இந்திய அளவில் டிரென்ட் செய்து வருகின்றனர். 

இந்த பாடல் வெளியாகி 12 மணிநேரத்தில் சுமார் 35 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கானோர் பாடல் வீடியோவை பார்க்கிறார்கள். ராணுவ வீரர்களையும் இது கவர்ந்துள்ளது. பாடலை கொண்டாடும் வகையில் ராணுவ வீரர்கள் கேக் வெட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.