சினிமா செய்திகள்

நடிகை சாந்தினி திருமணம் நடன இயக்குனரை மணந்தார் + "||" + Actress Shanthini is married She married the dance director

நடிகை சாந்தினி திருமணம் நடன இயக்குனரை மணந்தார்

நடிகை சாந்தினி திருமணம் நடன இயக்குனரை மணந்தார்
‘சித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.
வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, வண்டி ஆகிய படங்களிலும் தெலுங்கிலும் 20–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். 

சாந்தினிக்கும் நந்தா என்ற நடன இயக்குனருக்கும் காதல் மலர்ந்தது. மாலைப்பொழுதின் மயக்கத்திலே, வில் அம்பு, பியார் பிரேமா காதல், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடன இயக்குனராக நந்தா பணியாற்றி உள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். பெற்றோர்களும் இதற்கு சம்மதித்தனர். 

இதைத்தொடர்ந்து சாந்தினி–நந்தா திருமணம் திருப்பதி கோவிலில் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். சாந்தனி கழுத்தில் நந்தா தாலி கட்டினார். அப்போது திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 16–ந்தேதி சென்னையில் நடக்கிறது. 

சாந்தினி கூறும்போது, ‘‘நானும் நந்தாவும் 9 வருடங்களாக காதலித்து இப்போது திருமணம் செய்து கொண்டு இருக்கிறோம். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்’’ என்றார்.