சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு? + "||" + Net-worth, assets and properties of Rajinikanth

ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?
ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று  தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் இறுதியில், தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவேன் என அறிவித்த பிறகு, இது ரஜினியின் முதல் பிறந்த நாள் ஆகும்.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள்  சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து கூறினர்.

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.360 கோடி ஆகும். ஃபின்ஆப் இந்த தகவலை வெளியிட்டது.

நடிப்பிற்காக இவர் வாங்கும் சம்பளம் மற்றும் இவரது வீடு கார்கள் ஆகியவற்றை வைத்து இந்த சொத்து மதிப்பு  கணக்கிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 35 கோடி. ரஜினிகாந்திடம் மொத்தம் 3 சொகுசு கார்கள் இருக்கின்றன. ரேஞ்ச் ரோவர், பென்ட்லி  மற்றும் டொயோட்டா இன்னோவா. ரூ.110 கோடிக்கு தனிப்பட்ட முதலீடுகள் உள்ளன. 

ரஜினிகாந்தின் ஒவ்வொரு ஆண்டு வருமானங்கள் இதோ:-

2016 - ரூ .65 கோடி
2015 - ரூ . 58 கோடி
2014 - ரூ. 35 கோடி
2013 - ரூ. 60 கோடி
2012 - ரூ . 49 கோடி