சினிமா செய்திகள்

சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி + "||" + Social website Ajith fans have hit the Kasturi

சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி

சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய  கஸ்தூரி
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக பிரச்சினைகள் குறித்து அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.
விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கிறார் நடிகை கஸ்தூரி. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை ஆணவ கொலை செய்து உடல்களை காவிரி ஆற்றில் வீசியதை கண்டித்தார். 

‘‘தொடரும் வலி, மற்றுமோர் நரபலி, பாழும் சாதி பேயின் ரத்த வெறிக்கும் எத்தனை காவு. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிக்கொண்டே அவலம்’’ என்று கண்டித்து இருந்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு லாரியில் நிவாரண பொருட்களும் அனுப்பினார். 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ஆதரவற்ற குழந்தைகளை 2.0 படத்துக்கு அழைத்து சென்றார். அவர்களுடன் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்லும் வீடியோவையும் தனது டுவிட்டரில் வெளியிட்டார். இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர், ‘‘பாரதியாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறவில்லை. ரஜினிக்கு வாழ்த்து சொல்கிறீர்களே’’ என்று அவரை டுவிட்டரில் விமர்சித்தார். 

‘‘டுவிட்டர்ல மாலை போடுவது எப்படி என்று அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த அதிமேதாவியை, அண்ணன் அஜித்தின் ஒரே தம்பியான தலைவலி’’ என்று பதிலடி கொடுத்தார். அஜித் பெயரை கஸ்தூரி இழுத்ததை ரசிகர்கள் கண்டித்தனர். இதனால் இணையதளத்தில் மோசமான வார்த்தைகள் மூலம் கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர் களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜி.ஆர்.-லதாவை விமர்சிப்பதா? கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் கண்டனம்
நடிகை கஸ்தூரி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.ஜி.ஆர்-லதாவுடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து சர்ச்சையானது.
2. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் சேலத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சேலத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
3. ஜெயலலிதா உணவுக்கு ரூ.1 கோடியா? நடிகை கஸ்தூரி விமர்சனம்
ஜெயலலிதா உணவுக்கு ரூ.1 கோடியா? என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.