சினிமா செய்திகள்

நடிகை சுவேதா பாசு திருமணம் டைரக்டரை மணந்தார் + "||" + Married actress Swetha Basu Married the director

நடிகை சுவேதா பாசு திருமணம் டைரக்டரை மணந்தார்

நடிகை சுவேதா பாசு திருமணம் டைரக்டரை மணந்தார்
தமிழில் உதயா நடித்த ‘ரா ரா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவேதா பாசு. தொடர்ந்து கருணாஸ் நடித்த சந்தமாமா, ஒரு முத்தம் ஒரு யுத்தம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
ஆரம்பத்தில் இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுவேதா பாசு தேசிய விருதும் பெற்றுள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் சுவேதா பாசு சிக்கினார். சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் தங்கி இருந்து விட்டு வீடு திரும்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவேதா பாசுவுக்கு பட வாய்ப்பு அளிக்க சில இயக்குனர்கள் முன்வந்தனர். தொடர்ந்து படங்களில் நடித்தார்.


சுவேதா பாசுவுக்கும் இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இருவீட்டு பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்தது. பின்னர் இருவரும் பாலி தீவுக்கு ஜோடியாக சென்றனர். அந்த படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

 சுவேதா பாசு–ரோகித் மிட்டல் திருமணம் புனேவில் நேற்று திடீரென்று நடந்தது. பெங்காலி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.