சினிமா செய்திகள்

சினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ் + "||" + Cinema writer's association withdraws resignation Bhagyaraj is the leader again

சினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்

சினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்
‘கோகோ மாக்கோ’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராம்குமார், கதாநாயகியாக தனுஷா நடித்துள்ளனர்.
 சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய்ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ராம்காந்த் டைரக்டு செய்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:–


‘‘சர்கார் பட பிரச்சினையில் பலருக்கு மனப்புழுக்கம் இருந்தது. இதனால் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்தேன். மீண்டும் அந்த பதவியில் தொடருமாறு பலரும் வற்புறுத்தினர். 21 செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். நான் பதவியில் தொடர வேண்டும் என்றும் இல்லையேல் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் நடத்துவது சரியாக படவில்லை. எனவே ராஜினாமாவை வாபஸ் பெற்று மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன். இப்போது எழுத்தாளர் சங்கம் மீது பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. நிறையபேர் தங்கள் கதைகளை பதிவு செய்கிறார்கள்.  கோகோ மாக்கோ படக்குழுவினர் டிக்கெட் முன்பதிவுக்கு சொந்தமாக செயலி தொடங்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முயற்சியில் அவர்கள் வெற்றிபெற வேண்டும்.’’

இவ்வாறு அவர் பேசினார்.

கதாநாயகன் ராம்குமார், டைரக்டர் ராம்காந்த் ஆகியோரும் பேசினார்கள்.