சினிமா செய்திகள்

திகில் படங்களில் பிரபலமான இந்தி டைரக்டர் மரணம் + "||" + The death of the popular Hindi Horror Director

திகில் படங்களில் பிரபலமான இந்தி டைரக்டர் மரணம்

திகில் படங்களில் பிரபலமான இந்தி டைரக்டர் மரணம்
திகில் படங்களில் பிரபலமான இந்தி டைரக்டர் துளசி ராம்சே மரணம் அடைந்தார்.
இந்தி திரையுலகில் ராம்சே சகோதரர்கள் என்ற 7 பேர் பிரபலமானவர்கள். அண்ணன் தம்பிகளான இவர்கள் இந்தியில் ஏராளமான படங்களை தயாரித்து உள்ளனர். டைரக்டும் செய்து இருக்கிறார்கள். இந்த சகோதரர்களில் ஒருவர் துளசி ராம்சே. இவர் 1980 மற்றும் 90-களில் இந்தியில் ஏராளமான திகில் படங்களை டைரக்டு செய்து உள்ளார்.


ஹோட்டல், புரானா மந்திர், தக்கானா, வீரானா, பந்த் தர்வாஸா உள்பட பல முக்கிய படங்களை இயக்கி உள்ளார். இந்த படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தன. டி.வி. தொடர்களையும் இயக்கி உள்ளார். சில படங்களையும், டி.வி. தொடர்களையும் தயாரித்தும் இருக்கிறார்.

மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். துளசி ராம்சேவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

துளசி ராம்சே மறைவுக்கு இந்தி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். இறுதி சடங்கில் கலந்துகொண்டும் அஞ்சலி செலுத்தினார்கள்.