சினிமா செய்திகள்

ரூ.25 கோடி கேட்டு மிரட்டிய தாதா - நடிகை லீனா மரியாவை சுட்டுக்கொல்ல முயற்சி? + "||" + Dada threatened asking Rs 25 crore - Trying to shoot actress Lina Maria?

ரூ.25 கோடி கேட்டு மிரட்டிய தாதா - நடிகை லீனா மரியாவை சுட்டுக்கொல்ல முயற்சி?

ரூ.25 கோடி கேட்டு மிரட்டிய தாதா - நடிகை லீனா மரியாவை சுட்டுக்கொல்ல முயற்சி?
ரூ.25 கோடி கேட்டு மிரட்டிய தாதா, நடிகை லீனா மரியாவை சுட்டுக்கொல்ல முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிரபல மலையாள நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். சென்னையில் உள்ள வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.

கொச்சியில் லீனா மரியா பால் நடத்தி வரும் பியூட்டி பார்லரை நோக்கி பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். அப்போது லீனா மரியா பால் கடையில் இல்லை. 2 பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சில நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி புஜாரா, லீனா மரியாவுக்கு போன் செய்து ரூ.25 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொச்சி போலீசில் அவர் புகார் செய்தார்.

எனவே மும்பை தாதா, ஆத்திரத்தில் ஆட்களை அனுப்பி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். லீனா மரியா பால் அதிர்ச்சியில் உள்ளார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ரவி புஜாராவை தேடி மும்பைக்கும் தனிப்படை போலீசார் செல்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. குடும்ப தகராறில் விபரீதம் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மனைவியை மிரட்ட திராவகம் குடித்த போலீஸ்காரர்
குடும்பத் தகராறில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தனது மனைவியை மிரட்ட போலீஸ்காரர் ஒருவர் திராவகம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. வட்டி கேட்டு மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருப்புவனம் அருகே கடன் தொகையை கட்டிய பிறகும், வட்டி பணம் கேட்டு மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
3. காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு
காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. நடிகை மீது திராவகம் வீசுவதாக மிரட்டல்
நடிகை தீபிகா காகர் மீது திராவகம் வீசுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
5. தாய்லாந்து: பபுக் புயல் மிரட்டல் - சுற்றுலா பயணிகள் தவிப்பு
தாய்லாந்தில், பபுக் புயல் காரணமாக சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.