சினிமா செய்திகள்

படமாகும் விஞ்ஞானி வாழ்க்கை - நம்பி நாராயணன் தோற்றத்தில் மாதவன் + "||" + A film about the life of the scientist - Nambi Narayanan in appearance Madhavan

படமாகும் விஞ்ஞானி வாழ்க்கை - நம்பி நாராயணன் தோற்றத்தில் மாதவன்

படமாகும் விஞ்ஞானி வாழ்க்கை - நம்பி நாராயணன் தோற்றத்தில் மாதவன்
படமாகும் விஞ்ஞானி வாழ்க்கை திரைப்படத்தில், நம்பி நாராயணன் தோற்றத்தில் மாதவன் நடிக்கிறார்.

திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு அவர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மீண்டும் பணியில் சேர்ந்த அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. 2001-ல் ஓய்வு பெற்றார். பொய் வழக்கில் தன்னை சிக்க வைத்த அதிகாரிகள் மீது நம்பிநாராயணன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

நம்பிநாராயணன் வாழ்க்கை தற்போது சினிமா படமாக தயாராகிறது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன.

இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ஆனந்த் மகாதேவன் டைரக்டு செய்கிறார். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்கும் மாதவன் தோற்றம் வெளியாகி உள்ளது. கதாபாத்திரத்தில் அவர் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.