சினிமா செய்திகள்

ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் வழக்கு + "||" + Harvey Weinstein On More An actress case

ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் வழக்கு

ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் வழக்கு
ஹார்வி வெயின்ஸ்டீன் மீது ஜேன் டோ என்று பெயரை மனுவில் குறிப்பிட்டு இன்னொரு நடிகையும் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி புகார் கூறினார். இந்தி நடிகை ஐஸ்வர்யாராயையும் அவர் தனியாக சந்திக்க முயன்று அது நடக்கவில்லை என்றும் கூறப்பட்டது. 

இதுபோல் நடிகை ரோஸ் மெக்கோவன், அன்ன பெல்லா உள்ளிட்ட மேலும் பல நடிகைகளும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார்கள். 70–க்கும் மேற்பட்ட பெண்கள் அவர் மீது கற்பழிப்பு புகார் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

இந்த நிலையில் ஜேன் டோ என்று பெயரை மனுவில் குறிப்பிட்டு இன்னொரு நடிகையும் அவர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:– 

‘‘ஹார்வி வெயின்ஸ்டீன் வலுக்கட்டாயமாக என்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டார். இதுகுறித்து வெளியே சொன்னால் எனது சினிமா வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன் என்றும் எச்சரித்தார். 2 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். அவரது அலுவலகத்தில் வைத்தும் தரையில் தள்ளி சீரழித்தார். அப்போது அவர் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்சுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக பெருமையாக பேசினார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ஆனால் ஹார்வி வெயின்ஸ்டீனுடன் தான் உறவு வைத்துக்கொள்ளவில்லை என்று நடிகை ஜெனிபர் லாரன்ஸ் மறுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.