சினிமா செய்திகள்

ஹன்சிகா புகைக்கும் படம்; டைரக்டர் விளக்கம் + "||" + Hansika smoking image; Director Description

ஹன்சிகா புகைக்கும் படம்; டைரக்டர் விளக்கம்

ஹன்சிகா புகைக்கும் படம்; டைரக்டர் விளக்கம்
ஹன்சிகா ‘மஹா’ என்ற படத்தில் நடிக்கிறார். ஜமீல் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் ஹன்சிகாவின் புகைப்பிடிக்கும் தோற்றம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத் தளத்தில் வைரலாகி உள்ளது.

இதை எதிர்த்து ஹன்சிகா மீதும், டைரக்டர் மீதும் பா.ம.க பிரமுகர் வழக்கு தொடர்ந்துள்ளார். மஹா படத்தின் போஸ்டர் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாகவும் உள்ளது என்று மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு குறித்து டைரக்டர் ஜமீலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து, முஸ்லிம் என்பதை விட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். புகைப்பிடிக்கும் படத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். தயவு செய்து சாதி, மத கோணத்தில் அணுக வேண்டாம். கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை சந்திப்போம். இதுகுறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை ஹன்சிகா கூறும்போது “மஹா எனது 50-வது படம். அந்த படம் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப படத்தின் போஸ்டர் பற்றி பேசுகிறார்கள். இது ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன” என்றார்.