சினிமா செய்திகள்

ஜெயலலிதா உணவுக்கு ரூ.1 கோடியா?நடிகை கஸ்தூரி விமர்சனம் + "||" + Jayalalithaa meals Actress Kasturi Review

ஜெயலலிதா உணவுக்கு ரூ.1 கோடியா?நடிகை கஸ்தூரி விமர்சனம்

ஜெயலலிதா உணவுக்கு ரூ.1 கோடியா?நடிகை கஸ்தூரி விமர்சனம்
ஜெயலலிதா உணவுக்கு ரூ.1 கோடியா? என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவானதாக மருத்துவ நிர்வாகம் சார்பில் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தெரிவிக்கப்பட்டது. இதில் உணவுக்கு மட்டும் 75 நாட்களில் ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 செலவாகி இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

உணவு செலவு சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது. இட்லிக்கு இவ்வளவு தொகையா என்று நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேல், சந்தானம் படங்களுடன் மீம்ஸ்களும் பரவின. “இட்லி ஒவ்வொன்றும் தங்கத்துல செஞ்சதாம். வைரத்த அரைச்சி சட்னி. பின்ன இரும்பு மனுசின்னா சும்மாவா” என்பன போன்ற வாசகங்கள் மீம்ஸ்களில் இருந்தன.

நடிகை கஸ்தூரியும் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்தார். “அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா. அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா. நல்லா சொல்றீங்க கணக்கு” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜி.ஆர்.-லதாவை விமர்சிப்பதா? கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் கண்டனம்
நடிகை கஸ்தூரி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.ஜி.ஆர்-லதாவுடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து சர்ச்சையானது.
2. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் சேலத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சேலத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
3. சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக பிரச்சினைகள் குறித்து அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.
4. ‘‘செருப்பால் அடித்தேன்’’ நடிகை கஸ்தூரியின் பாலியல் தொல்லை அனுபவம்
நடிகை கஸ்தூரியும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக கூறியுள்ளார்.