சினிமா செய்திகள்

ரூ.11 கோடியை இழந்த விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi lost Rs 11 crores

ரூ.11 கோடியை இழந்த விஜய் சேதுபதி

ரூ.11 கோடியை இழந்த விஜய் சேதுபதி
இந்த வருடம் 11 கோடி ரூபாயை இழந்து இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.
விஜய் சேதுபதி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இதனால் அவரது படங்கள் தயாரிப்பாளர்கள் கையை சுடாமல் லாபம் பார்த்து கொடுக்கின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த செக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது சீதக்காதி படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு வருகிறது. மாமனிதன், சூப்பர் டீலக்ஸ், இடம்பொருள் ஏவல் படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்கிறார். 96 படம் வெளியானபோது பண நெருக்கடியில் சிக்கி படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் தயாரிப்பாளருக்கு ரூ.4 கோடி கொடுத்து படம் திரைக்கு வர உதவியதாக கூறப்பட்டது. இதுபோல் மேலும் சில பிரச்சினைகளில் பணத்தை இழந்துள்ளார். இதுகுறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “இந்த வருடம் பண ரீதியாக நான் பெரிய பின்னடைவை சந்திதேன். அதாவது ரூ.11 கோடியை இழந்து இருக்கிறேன். அதற்கான காரணங்கள் என்னவென்று எனக்கே தெளிவாக புரியாமல் இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது ரஜினிகாந்துடன் பேட்ட, மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்த வருடத்தில் 96 பெரிய வெற்றி படமாக அமைந்தது’ என்றார்.