திரைக்கு வரும் என்.டி.ஆர். வாழ்க்கை கதை


திரைக்கு வரும் என்.டி.ஆர். வாழ்க்கை கதை
x
தினத்தந்தி 21 Dec 2018 10:00 PM GMT (Updated: 21 Dec 2018 5:14 PM GMT)

என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகி உள்ளது.

தமிழில் பாதாள பைரவி, கல்யாணம் பண்ணிப்பார், வேலைக்காரி மகள், மருமகள், தெனாலிராமன், சம்பூர்ண ராமாயணம், கர்ணன் உள்ளிட்ட பழைய படங்களில் நடித்தவர் மறைந்த என்.டி.ராமராவ். தெலுங்கிலும் 1960 மற்றும் 70-களில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருந்தார்.

தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து ஆந்திர முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தார். அவருடைய வாழ்க்கை தற்போது சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவே நடித்துள்ளார். என்.டி.ராமராவ் மனைவியாக வித்யாபாலன் வருகிறார்.

‘த டர்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து தேசிய விருது பெற்ற அவரை அதிக சம்பளம் கொடுத்து இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். 9 முன்னணி கதாநாயகிகள் இதில் நடித்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவாக ராணா, சாவித்திரியாக நித்யா மேனன், ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங் வருகிறார்கள்.

நடிகர் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் மகேஷ்பாபுவும், நாகேஸ்வரராவாக சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவும் நடித்துள்ளனர். என்.டி.ராமராவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள், சினிமா சாதனைகள், அரசியல் பயணம் ஆகியவற்றை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகிறது. அதிக பொருட்செலவில் பாலகிருஷ்ணாவே தயாரித்துள்ளார்.

படத்தில் பாலகிருஷ்ணா, வித்யாபாலன் நடிக்கும் தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன் முதல் பாகம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

Next Story