சினிமா செய்திகள்

அமெரிக்காவில் சந்திப்புமீண்டும் காதலருடன் சுருதிஹாசன் + "||" + Again with the lover shruti hassan

அமெரிக்காவில் சந்திப்புமீண்டும் காதலருடன் சுருதிஹாசன்

அமெரிக்காவில் சந்திப்புமீண்டும் காதலருடன் சுருதிஹாசன்
அமெரிக்கா சென்றுள்ள சுருதிஹாசன் காதலர் மைக்கேல் கார்செல்லை சந்தித்தார்.
நடிகை சுருதிஹாசன் 2009-ல் லக் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்தார். 7-ம் அறிவு, 3, புலி, வேதாளம், சி.3 ஆகியவை அவர் நடித்த முக்கிய தமிழ் படங்கள். ஒரு வருடமாக படங்களில் அவர் நடிக்கவில்லை. இசை துறையில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சுருதிஹானுக்கும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு இசைக்குழுவுக்காக சுருதிஹாசன் பாட சென்றிருந்தபோது அறிமுகமாகி காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த மைக்கேலை மும்பை விமான நிலையத்தில் சுருதிஹாசன் வரவேற்று காரில் அழைத்து சென்ற படங்கள் வெளியாகி காதலை அம்பலப்படுத்தியது.

தாய் சரிகாவிடம் மைக்கேலை அறிமுகப்படுத்திய படங்களும் வந்தன. சென்னையில் திருமண நிகழ்ச்சியொன்றில் மைக்கேல் பட்டு வேட்டி சட்டை அணிந்து சுருதிஹாசனுடன் பங்கேற்றார். அருகில் கமல்ஹாசனும் இருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. மைக்கேலை திருமணம் செய்துகொள்ள கமல்ஹாசனிடம் சம்மதம் வாங்க அழைத்து வந்து இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள சுருதிஹாசன் அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மைக்கேலை சந்தித்தார். இருவரும் ஜோடியாக இருக்கும் படத்தையும் சுருதிஹாசன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தின் கீழே “என்னை நீ சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறாய். இந்த உலகத்தில் இது ஒரு முக்கியமான விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.