சினிமா செய்திகள்

மலையாள படத்தில், விஜய்சேதுபதி + "||" + In Malayalam film, Vijay Sethupathi

மலையாள படத்தில், விஜய்சேதுபதி

மலையாள படத்தில், விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
விஜய் சேதுபதி அழுத்தமான கதைகளில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி, தாதா, வில்லன், திருநங்கை என்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறார், சமீபத்தில் திரைக்கு வந்த சீதக்காதி படத்தில் வயதான நாடக நடிகராகவும் நடித்து இருந்தார். ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி திறமையான நடிகர் என்று ரஜினிகாந்த் பாராட்டி பேசினார். இந்த வருடம் விஜய்சேதுபதி நடிப்பில் ஜுங்கா, செக்கச் சிவந்த வானம், 96, சீதக்காதி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ஆகிய படங்கள் வந்தன. இமைக்கா நொடிகள், டிராபிக் ராமசாமி படங்களில் கவுரவ தோற்றத்தில் வந்தார்.

பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது. சீனுராமசாமி இயக்கும் மாமனிதன், தியாகராஜன் குமார ராஜா இயக்கும் சூப்பர் டீலக்ஸ், இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன. வேற்றுமொழி படங்களில் நடிக்கவும் கவனம் செலுத்துகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார்.

அதிக பொருட்செலவில் சரித்திர படமாக இது தயாராகிறது. அடுத்து மலையாள படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு இணையான வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. சுனில் என்பவர் இயக்குகிறார். படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மலையாள படத்தில், விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். வயதான தோற்றம், ரவுடி, போலீஸ் அதிகாரி என்று படத்துக்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்கிறார்.
2. ‘இமைக்கா நொடிகள்’ படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர்கள் விஜய்சேதுபதி, அதர்வா, நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.