சினிமா செய்திகள்

மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன் - இயக்குநர் அமீர் + "||" + MakkalNeedhi Maiam The struggle for the people of Tamil Nadu will take place When I will stand in support- Director Ameer.

மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன் - இயக்குநர் அமீர்

மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன்  - இயக்குநர் அமீர்
மக்கள் நீதி மய்யம் தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன் என இயக்குநர் அமீர் கூறி உள்ளார். #MakkalNeedhiMaiam
சென்னை,

மக்கள் நீதி மய்ய கட்சியின் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் அமீர்  கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்  கூடாது என்ற நிலைப்பாட்டில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது. அதனை வரவேற்கிறேன்.

இலங்கை பிரச்சினை தீவிரமாக இருந்த நேரத்தில் திமுக நடத்திய மனித சங்கிலி போராட்டத்திலும் கலந்து கொண்டேன். நான் சந்தித்த தமிழக அரசியல் சூழல், மக்கள் போராட்டங்கள் குறித்து கமலிடம் விளக்கினேன். மக்கள் போராட்டங்கள் தொடர்பாக கருத்து கேட்க அழைத்திருந்தார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் நிற்பேன். 10 ஆண்டுகளாக சீமானுடன் இணைந்து பணியாற்றினேன், மக்களின் கருத்துக்களை அறியவும், ஆலோசனை வழங்கவும் மக்கள் நீதி மய்யத்திற்கு துணை நிற்பேன் என கூறினார்.

ரஜினி அழைத்தால் செல்வீர்களா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, நல்ல விஷயத்திற்கு யார் அழைத்தாலும் செல்வேன் என்று அமீர்  கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்
இளையராஜா விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
2. ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் -கமல்ஹாசன்
ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
3. இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடி?
தமிழ் பட உலகின் `நம்பர்-1' நாயகி நயன்தாரா ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். கமல்ஹாசனுடன் மட்டும் அவர் இதுவரை ஜோடி சேரவில்லை.
4. ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு
கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ‌ஷங்கர் டைரக்டு செய்கிறார்.
5. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; கமல்ஹாசன்
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் கூறியுள்ளார்.