சினிமா செய்திகள்

திரைப்பட டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு + "||" + GST tax reduction for movie tickets

திரைப்பட டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

திரைப்பட டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
திரைப்பட டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரியானது குறைக்கப்பட்டு உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது.  இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கூட்டத்திலும் தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மற்றும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் தொடர்புடைய 23 பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது.  

ரூ.100க்கு மேல் உள்ள திரைப்பட டிக்கெட்டுகளுக்கு இதுவரை ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் என இருந்தது.  இது 18 சதவீதம் என குறைக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று ரூ.100க்கு கீழ் உள்ள திரைப்பட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என இருந்த ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதம் என குறைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.