சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில் ! குருவியார் + "||" + Cinema question and Answer Kuruviya

சினிமா கேள்வி பதில் ! குருவியார்

சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்களில் பலர், சென்னையை அடுத்த பனையூரில் குடியேறி விட்டதாக தகவல் வருகிறதே...இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் யார்? (ஏ.வினாயகராஜ், சென்னை)

பனையூரில் குடியேற பிள்ளையார் சுழி போட்டவர், விஜய். அவரை தொடர்ந்து சில நடிகர்-நடிகைகள் அங்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் விரைவில் அங்கே குடியேற திட்டமிட்டு இருக் கிறார்கள்!

***

குருவியாரே, இந்த வருட பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கும் படங்கள் எவை? (கே.வெற்றிச்செல்வன், சேலம்)

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட,’ அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய 2 படங்களும் பொங்கல் விருந்தாக வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளன!

***

குருவியாரே, அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகர் யார்? அவர் இதுவரை எத்தனை மொழி படங்களில் நடித்து இருக்கிறார்? (கே.சி.மல்லிகார்ஜுன், பெங்களூரு)

பிரகாஷ்ராஜ்! தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும் நடித்திருப்பவர், இவர்தான்!

***

கடந்த மூன்று நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் பேய் படங்கள் அதிகமாக தயாராவதற்கு முன்னோடியாக அமைந்த படம் எது? (ஆர்.அரவிந்த், ஈரோடு)

‘சந்திரமுகி.’ இந்த படத்தின் அமோக வெற்றியும், வசூலும் பேய் படங்களுக்கு வரவேற்பு இருப்பதை அடையாளம் காட்டின. அதைத்தொடர்ந்து வரிசையாக பேய் படங்கள் வர ஆரம்பித்தன!

***

குருவியாரே, வரலட்சுமி சரத்குமார் துணிச்சல் மிகுந்த நடிகை என்று பேசப்படுகிறதே...அதற்கு காரணம் யார்? (சி.மோகன், திருச்சி)

அவருடைய அப்பா சரத்குமார்!

***

சோனியா அகர்வால், மார்க்கெட்’ இழந்தது எப்படி? (எஸ்.குணா, திண்டுக்கல்)

அவர் நடித்து வெளிவந்த சில படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியதுதான் காரணம்!

***

குருவியாரே, பிரபல கதாநாயகியாக ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீதிவ்யா, மிக குறுகிய காலத்துக்குள் காணாமல் போய்விட்டாரே...? (எம்.மேகநாதன், தூத்துக்குடி)

“வெற்றியை எப்படி தக்கவைத்துக் கொள்வது? என்ற தொழில்நுட்பம் எனக்கு தெரியவே தெரியாது. இதுதான் என் தோல்விக்கு காரணம்” என்று ஸ்ரீதிவ்யாவே சொல்கிறார்!

***

குருவியாரே, நடிகை ராதா தனது மகள்கள் இருவரையும் கதாநாயகிகளாக நடிக்க வைத்தாரே...இப்போது அவர்கள் எங்கே, எப்படியிருக்கிறார்கள்? (பி.ரவீந்தர், உளுந்தூர்பேட்டை)

ராதாவின் மகள்கள் இரண்டு பேரும் அம்மா, அப்பாவுடன் இணைந்து ஓட்டல் தொழிலை கவனிக்கிறார்கள்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘சொர்க்கம்,’ ‘எங்கிருந்தோ வந்தாள்’ ஆகிய 2 படங்களில், எந்த படம் அதிக நாட்கள் ஓடியது? எந்த படம் அதிக வசூல் செய்தது? (எம்.ஞானவேல், தேனி)

2 படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்து, 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றன. ‘சொர்க்கம்’ படத்தை விட, ‘எங்கிருந்தோ வந்தாள்’ படம் அதிக நாட்கள் ஓடி, அதிக வசூல் செய்தது!

***

குருவியாரே, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது நடிகர்களா அல்லது நடிகைகளா? (எம்.மது ஜெயபால், அத்திமலைப்பட்டு)

நடிகர்களை விட, நடிகைகள்தான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்களாம்!

***

குருவியாரே, ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா எங்கே வசிக்கிறார்? (ஆர்.செல்வராஜ், ஊட்டி)

கே.ஆர்.விஜயா தற்போது கேரளாவில் வசித்து வருகிறார்!

***

‘கன்னடத்து பைங்கிளி’ என்று புகழப்பட்ட சரோஜாதேவி ஏதாவது படத்தில் நடிக்கிறாரா? (ஆர்.தனபால், பெருங்களத்தூர்)

சரோஜாதேவி தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை!

***

குருவியாரே, நடிகர்- டைரக்டர் ராகவா லாரன்ஸ் அவருடைய தாயாருக்காக கட்டிய கோவில் எங்கே இருக்கிறது? (எம்.டேவிட், அன்னதானப்பட்டி)

ராகவா லாரன்ஸ் முதலில் சென்னை ஆவடியில் ராகவேந்திர சாமிக்கு கோவில் கட்டினார். அதே காம்பவுண்டில் அவருடைய தாயாருக்கும் கோவில் கட்டி யிருக்கிறார்!

***

குருவியாரே, படத்துக்கு படம் தன் தோற்றத்தை மாற்றுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், விக்ரம். அவருடைய மகன் துருவும் அதே பாணியில் படத்துக்கு படம் தோற்றத்தை மாற்றிக் கொள்வாரா? (ஜி.பாலாஜி, தரமணி)

விக்ரம் பாணி வேறு, துருவின் பாணி வேறு. இதை மிக விரைவில் வர இருக்கும் ‘வர்மா’ படம் நிரூபிக்குமாம்!

***

சில படங்கள் திரைக்கு வருவதற்கு அந்த படங்களின் கதாநாயகர்கள் பண உதவி செய்கிறார்களே...அப்படி உதவி செய்யும் கதாநாயகர்கள் பட்டியலில், ‘லேட்டஸ்ட்’ ஆக இடம் பெற்றவர் யார்? (என்.பிரதாப், விருத்தாசலம்)

விஜய் சேதுபதி!

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா கேள்வி பதில்- குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
2. சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007