சினிமா செய்திகள்

பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து + "||" + Actress Aditya Rao's comment on sexual harassment

பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து

பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து
பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதிராவ். தற்போது உதயநிதியுடன் ‘சைக்கோ’ படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் விசாகபட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும்போது படுக்கைக்கு சம்மதிக்காததால் பட வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“என்னை வீட்டில் கட்டுப்பாட்டுடன் வளர்த்து இருந்தனர். இதனால் சினிமா துறைக்கு வந்ததும் எதுவும் புரியாத அப்பாவியாக இருந்தேன். பட உலகில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பது பற்றியும் எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அவை நடந்து கொண்டு இருந்தன. எனக்கு அதுபோன்று மோசமான பெரிய அனுபவம் நிகழாவிட்டாலும் ஒரு சம்பவம் நடந்தது.

பட வாய்ப்பு வேண்டுமென்றால் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றனர். நான் அப்படிப்பட்ட படவாய்ப்பு தேவை இல்லை என்று கூறிவிட்டு சென்று விட்டேன். அந்த சம்பவத்துக்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு படங்கள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள்.

நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். இப்போது ‘மீ டு’ இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது. இவ்வாறு அதிதிராவ் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கென தனி அறை ஒதுக்கி பாலியல் தொல்லை போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமிகளுக்கென தனி அறை ஒதுக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
2. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வேப்பூர் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம்
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் வேப்பூர் போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
3. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி கலெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி கலெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
4. பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர் - ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்
பாலியல் தொல்லை கொடுப்பதாக, நடிகர் ஒருவருக்கு ஸ்ரீரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
5. பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: சரண் அடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணை
புதுக்கடை அருகே பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் சரண் அடைந்த வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.