சினிமா செய்திகள்

ரூ.1 கோடி மோசடி புகார் : நடிகர் அர்ஜுன் ராம்பால் கைதாவாரா? + "||" + Rs 1 crore fraud complaint: actor Arjun Rampal takes charge?

ரூ.1 கோடி மோசடி புகார் : நடிகர் அர்ஜுன் ராம்பால் கைதாவாரா?

ரூ.1 கோடி மோசடி புகார் : நடிகர் அர்ஜுன் ராம்பால் கைதாவாரா?
பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால். மோஷா, தீவானா பன், தில் ஹை தும்காரா, அசம்பவ், வாதா, எலான், அலாக், ஓம் சாந்தி ஓம், ராக் ஒன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இந்தி திரையுலகில் கோடிக்கணக்கான பணத்தை கடனாக வாங்கி படங்களில் முதலீடு செய்கிறார்கள்.

அர்ஜுன் ராம்பாலும் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடி கடனாக வாங்கி இருந்தார். அந்த தொகையை 90 நாட்களில் திருப்பி செலுத்தி விடுவதாக காசோலையும் வழங்கி உள்ளார். கடனுக்கு 12 சதவீதம் வட்டி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் அந்த நிறுவனம் அர்ஜுன் ராம்பால் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியது.


ஆனால் அது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதைத்தொடர்ந்து அர்ஜுன் ராம்பால் மீது அந்த நிறுவனம் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் அர்ஜுன் ராம்பால் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் அக்‌ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த பேட்மேன் படத்தின் பெண் தயாரிப்பாளர் பிரான் அரோவும் ரூ.32 கோடி மோசடியில் சிக்கினார். ஒரே படத்தின் உரிமையை பலருக்கு கொடுத்து மோசடி செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர்.