சினிமா செய்திகள்

‘அசுரன்’ படத்தில் புதிய தோற்றத்தில் தனுஷ் + "||" + Dhanush is in the new look in 'Asurran'

‘அசுரன்’ படத்தில் புதிய தோற்றத்தில் தனுஷ்

‘அசுரன்’ படத்தில் புதிய தோற்றத்தில்  தனுஷ்
தனுஷ் நடித்து இந்த வருடம் வடசென்னை, மாரி–2 ஆகிய 2 படங்கள் வந்தன. இவற்றில் தாதா கதாபாத்திரங்களில் வந்தார்.
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாரான த எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் பஹிர் படத்திலும் நடித்து இருந்தார். இந்த படமும் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்போது கவுதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் இது திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அடுத்து தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் பெயரையும் தோற்றத்தையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.  படத்துக்கு ‘அசுரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு  உள்ளது. வடசென்னை படத்தை இயக்கிய வெற்றிமாறனே இந்த படத்தையும் டைரக்டு செய்கிறார். எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் போஸ்டரில் தனுஷ் நெற்றியில் விபூதி பூசி இதுவரை இல்லாத வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.


இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தனுஷ் தோற்றத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர்–நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.