சினிமா செய்திகள்

‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ - காஜல் அகர்வால் + "||" + '' Marriage after a suitable groom '' - Kajal Agarwal

‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ - காஜல் அகர்வால்

‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும்  திருமணம்’’ - காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்திலும் நடிக்கிறார். இந்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர் அளித்த பேட்டி வருமாறு:–
சினிமாவில் நிறைய வி‌ஷயங்களை கற்று இருக்கிறேன். மூத்த நடிகர்களின் நடிப்பை கவனிக்கிறேன். எல்லோரிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு வி‌ஷயம் இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்ததும் சினிமாவை மறந்து விட்டு எனது சொந்த வி‌ஷயங்களுக்கு போய் விடுவேன். எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது.


ஆனால் பொருத்தமான மாப்பிள்ளை இன்னும் கிடைக்கவில்லை. இதற்காகவே திருமணத்தை கொஞ்ச நாட்கள் தள்ளிப்போட்டு இருக்கிறேன். நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்போது உடனேயே எனது திருமணம் நடக்கும். அது காதல் திருமணமாகவும் இருக்கலாம். பெற்றோர்கள் நிச்சயம் செய்த திருமணமாகவும் இருக்கலாம்.

கதாநாயகியாக 50 படங்கள் தாண்டி விட்டேன். வெற்றி தோல்வி நம் கையில் இல்லை. ஒரு நிகழ்ச்சியில் என்னை ஒருவர் முத்தமிட்டது எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் மனதில் கெட்ட எண்ணம் இருந்து இருக்காது. அந்த சம்பவத்துக்கு பிறகு என்னிடம் மன்னிப்பு கேட்டார். அதோடு அந்த பிரச்சினையை விட்டு விட்டேன். லண்டன் எனக்கு பிடித்த இடம். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அங்கு போய் விடுவேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களை குடும்பத்தினருடன் கழிக்கிறேன்.