சினிமா செய்திகள்

கட்சி தொடங்குவது தாமதம் : மேலும் 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்? + "||" + Party starts delaying: Rajinikanth in 2 more films?

கட்சி தொடங்குவது தாமதம் : மேலும் 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்?

கட்சி தொடங்குவது தாமதம் : மேலும் 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் ரசிகர்களை கூட்டி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தார்.
ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் ரசிகர்களை கூட்டி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததும் 2 மாதங்களில் கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து கபாலி, காலா, 2.0 படங்களில் நடித்தார். அதன்பிறகு பேட்ட படத்திலும் நடித்து விட்டார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.


இனிமேல் சினிமாவுக்கு முழுக்கு போட்டு கட்சிபெயரை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் 2 படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாசும் இன்னொரு படத்தை வினோத்தும் டைரக்டு செய்வதாக கூறப்படுகிறது.  முருகதாஸ் படம் லஞ்சம் ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்டது. முதல்வன் படம் பாணியில் முருகதாஸ் ஸ்டைலில் திரைக்கதை இருக்கும் என்கின்றனர். ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இதில் நடிக்கிறார். டைரக்டர் வினோத் சதுரங்க வேட்டை படம் எடுத்து பிரபலமானவர்.

இப்போது அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. வினோத் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாகவும் அதன் திரைக்கதையை மேலும் நன்றாக செதுக்கும்படி அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து தனுசும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 2 படங்களையும் முடித்த பிறகே கட்சி பெயரை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்
சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
2. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வினோத் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு?
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.
3. ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? -குஷ்பு டுவிட்டரில் விமர்சனம்
ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
4. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
5. படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்
ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.