சினிமா செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும்-செய்தி தொடர்பாளர் குஷ்பு + "||" + Congress leader in Tamil Nadu Change will come Indian spokesperson Khushboo

தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும்-செய்தி தொடர்பாளர் குஷ்பு

தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும்-செய்தி தொடர்பாளர் குஷ்பு
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என்று அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்படுகிறது. தற்போது திருநாவுக்கரசர் அமெரிக்காவில் இருக்கிறார்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். அவரை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவரும் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாக வந்திருக்கிறார். அரசியல் பற்றி நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

கேள்வி:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை சுயநல கூட்டணி என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளாரே.

பதில்:- இதை சொல்வதற்கு முன்பு அவரது கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் உள்ள தலைவர்களிடையேயும் நிலவும் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டும்.

எங்கள் கூட்டணி சுயநல கூட்டணியா? மக்கள் நலக் கூட்டணியா? என்று மக்கள் சொல்வார்கள்.

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. பாஜக தேர்தல் தோல்வியில் இருந்தே இன்னும் மீளவில்லை. முதலில் அவர்கள் அதில் இருந்து மீளட்டும். பின் எங்களை பற்றி பேசட்டும். அவர்கள் தோல்வியை தாங்க முடியாமல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என்பதை கேள்விப்பட்டேன். மாற்றம் வரும் பார்ப்போம்.

இவ்வாறு குஷ்பு கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டாலின் உருவாக்கிய அற்புதமான கூட்டணியை வைகோ உடைத்துவிடக்கூடாது - கே.எஸ். அழகிரி
ஸ்டாலின் உருவாக்கிய அற்புதமான கூட்டணியை வைகோ உடைத்துவிடக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
2. காஷ்மீர் இரண்டாக பிரிப்பு: குஷ்பு, அமலாபால் கருத்து
ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்து நடிகைகள் குஷ்பு, அமலாபால் கருத்து தெரிவித்துள்ளனர்.
3. குமரியில் கமல்ஹாசன்-சரத்குமார் இன்று தேர்தல் பிரசாரம் நடிகை குஷ்புவும் வாக்கு சேகரிக்கிறார்
குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ச.ம.க. தலைவர் சரத்குமார் மற்றும் குஷ்பு ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.
4. தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு
தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு வைரலாகும் வீடியோ.
5. ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? -குஷ்பு டுவிட்டரில் விமர்சனம்
ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.