சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டிரெய்லர் 28-ந்தேதி வெளியீடு + "||" + Petta Trailer On 28th

ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டிரெய்லர் 28-ந்தேதி வெளியீடு

ரஜினிகாந்தின் பேட்ட படத்தின்  டிரெய்லர் 28-ந்தேதி வெளியீடு
ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டிரெய்லர் 28-ந்தேதி வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார் நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத். பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது பேட்ட படம். இந்நிலையில் இதன் டிரெய்லர் வரும் 28 அன்று வெளிவரவுள்ளது என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சமீபத்தில் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் வழக்கப்பட்டது. சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. 2 மணிநேரம் 51 நிமிடங்களுக்கு படக்குழு சமர்ப்பித்த படத்தில் சென்சார் குழு எந்த காட்சியையும் நீக்கவில்லை.

ஆனால் துப்பாக்கியால் சுடும் காட்சியின் நீளத்தை குறைத்துக்கொள்ள கூறியிருக்கிறார்கள். ரத்தம் தெறிக்கும் சில வன்முறை காட்சிகளைக் கறுப்பாகக் காட்டச்சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும் பல இடங்களில் வார்த்தைகளுக்கு `பீப்' சத்தம் கொடுக்கும்படியும் படக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜினியின் முந்தைய திரைப்படமான 2.0 மொத்தம் 147 நிமிடங்கள் நீளமுடையது. அதைவிட 25 நிமிடங்கள் அதிக நீளம் கொண்டிருக்கிறது பேட்ட திரைப்படம். 

தொடர்புடைய செய்திகள்

1. கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8-வது சீசனின் முதல் எபிசோட் வெளியானது - ட்ரெண்டிங்கில் முதலிடம்
இன்று வெளியான ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஆங்கிலத் தொடரின் 8-வது சீசனின் முதல் எபிசோட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2. தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு
தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு வைரலாகும் வீடியோ.
3. இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல்
இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
4. குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை
குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
5. ராதாரவி சர்ச்சை பேச்சு: தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி - நயன்தாரா
தன்னை குறித்து ராதாரவி தவறாக பேசிய விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என நடிகை நயன்தாரா தெரிவித்து உள்ளார்.