சினிமா செய்திகள்

தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி சொத்துகளை வழங்கும் ஹாலிவுட் நடிகர் + "||" + Hollywood actor who donates Rs. 500 crore to charity companies

தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி சொத்துகளை வழங்கும் ஹாலிவுட் நடிகர்

தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி சொத்துகளை வழங்கும் ஹாலிவுட் நடிகர்
பிரபல ஹாலிவுட் நடிகர் சோவ் யுன் பேட். ஹாங்காங்கை சேர்ந்தவர். எ பெட்டர் டுமாரோ, ஹார்ட் யாயில்ட், ஹிடன் டிராகன், த கில்லர், பைரேட் ஆப் கரிபியன்: அட் வேர்ல்ஸ் என்ட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
2015-ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் முதல் இடம் பிடித்து இருந்தார். இந்த நிலையில் தனது சொத்துகள் முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்போவதாக சோவ் யுன் பேட் அறிவித்து உள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“பணம் நிலை இல்லாதது. இறந்த பிறகு எடுத்து செல்லவும் முடியாது. எனவே சொத்துகள் முழுவதையும் எனது வாழ்க்கைக்கு பிறகு மற்றவர்கள் பயன்படுத்த கொடுக்க இருக்கிறேன். நான் இறந்த பிறகு முழு சொத்துகளையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய இருக்கிறேன். இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை. இங்கு எதையும் நிரந்தரமாக வைத்துக்கொள்ளவும் முடியாது என்று எனது குரு சொல்லி இருக்கிறார்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சோவ் யுன் பேட் சொத்துகள் இந்திய மதிப்பில் ரூ.502 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோவ் யுன் பேட் முடிவுக்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.