சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் அவதூறு: நடிகை போலீசில் புகார் + "||" + The website slander: Actress complains to police

வலைத்தளத்தில் அவதூறு: நடிகை போலீசில் புகார்

வலைத்தளத்தில் அவதூறு: நடிகை போலீசில் புகார்
பிரபல தெலுங்கு நடிகை அபூர்வா. பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
சீமா தபகய், அல்லாரி மற்றும் பல நகைச்சுவை படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் எதிர்ப்புகளையும் சம்பாதித்தார்.


இந்த நிலையில் அபூர்வா, தனக்கு சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் மிரட்டல்கள் வருவதாகவும் அவதூறு கருத்துகள் பதிவு செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திராவில் உள்ள ஒரு எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களும் மோசமாக தன்னை சமூக வலைத்தளத்தில் திட்டி வருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அபூர்வா புகார் கொடுத்துள்ளார். “என்னைப் பற்றி அவதூறு கருத்துகள் பதிவிடுவதால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். தினமும் சமூக வலைத்தளத்தில் இந்த தொல்லைகளை சந்திக்க வேண்டி உள்ளது. எனக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.