சினிமா செய்திகள்

புகைபிடிக்கும் சர்ச்சை படத்தில் ஹன்சிகாவின் இன்னொரு தோற்றம் + "||" + Another look of Hansika in the film on the smoking scene

புகைபிடிக்கும் சர்ச்சை படத்தில் ஹன்சிகாவின் இன்னொரு தோற்றம்

புகைபிடிக்கும் சர்ச்சை படத்தில் ஹன்சிகாவின் இன்னொரு தோற்றம்
‘மஹா’ என்ற படத்தில் ஹன்சிகா புகைப்பிடிப்பது போல் வெளியான புகைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா அடிக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதனால் ஹன்சிகா மீதும், டைரக்டர் ஜமீல் மீதும் பா.ம.க. பிரமுகர் வழக்கு தொடர்ந்துள்ளார். “புகைப்படம் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாகவும் உள்ளது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஹன்சிகா மற்றும் டைரக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் மஹா படத்தில் ஹன்சிகாவின் இன்னொரு தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படத்தில் ஹன்சிகா தொழுகை செய்வதுபோன்றும், பின்னால் நிழல் உருவத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹன்சிகா ஏற்கனவே புகைப்பிடிக்கும் சர்ச்சை படம் குறித்து கருத்து கூறும்போது, “மஹா எனது 50-வது படம் என்பதால் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப படத்தின் போஸ்டர் பற்றி பேசுகிறார்கள். இது ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன” என்று தெரிவித்து இருந்தார்.