சினிமா செய்திகள்

பொங்கலுக்கு வருகிறது தணிக்கையான ரஜினி, அஜித் படங்கள் + "||" + Comes to Pongal Rajinikanth, Ajith films are censored

பொங்கலுக்கு வருகிறது தணிக்கையான ரஜினி, அஜித் படங்கள்

பொங்கலுக்கு வருகிறது தணிக்கையான ரஜினி, அஜித் படங்கள்
ரஜினிகாந்தின் பேட்ட, அஜித் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் பொங்கலுக்கு வருகின்றன. இந்த படங்களை தணிக்கை குழுவுக்கு அனுப்பி இருந்தனர்.
பேட்ட படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழும், ‘விஸ்வாசம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழும் கிடைத்து உள்ளன. ரஜினிகாந்த் படங்களுக்கு பெரும்பாலும் யு சான்றிதழே கிடைக்கும்.

ஆனால் பேட்ட படத்துக்கு அந்த சான்றிதழை கொடுக்க தணிக்கை குழுவினர் மறுத்துள்ளனர். இதனால் 18 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்துதான் படத்தை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. சில காட்சிகளுக்கும் ஆட்சேபம் தெரிவித்து நீக்கி உள்ளனர். சண்டை காட்சியில் அதிக வன்முறை இருப்பதையும் குறைத்துள்ளனர். 6 காட்சிகளில் வசனம், சண்டைகள் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


இரண்டு படங்களுக்கும் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. பொங்கலுக்கு வருவதாக இருந்த சிம்பு படம் பின்வாங்கி விட்டது. பேட்ட, விஸ்வாசம் படங்களின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. டிரெய்லரும் விரைவில் வர இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினிகாந்த் இளைமை தோற்றத்தில் வருகிறார்.

ஜோடிகளாக சிம்ரன், திரிஷா நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் விடுதி வார்டனாக நடிப்பதாக தகவல் பரவி உள்ளது. விஸ்வாசம் படத்தில் நயன்தாரா நாயகியாக வருகிறார். இதில் அஜித்துக்கு இரட்டை வேடம். அதிரடி படமாக தயாராகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விஸ்வாசம் - இந்த வருடத்தின் பெரிய வெற்றி!
இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படத்துக்கு கிடைத்து இருக்கிறது.